8:10

by Perundevi

அதிகாலை எழும் சுசித்ரா
ஒவ்வொரு மணி நேரத்தையும்
மூச்சுவாங்கஏறுவாள்
8:10
ஹேப்பி மணமஹால்
பேருந்து நிறுத்தத்தில்நின்றால்
அலுவலகம் தொடங்கும்போது
அங்கிருக்கலாம்
ஓர் இரவு
தட்டில் கூடகொஞ்சம் சப்ஜி
வைக்கச்சொன்ன
கணவனை ரெண்டு
கெட்டவார்த்தையில்திட்டினாள்
அப்போது
8:10
எண்களின் பரப்பில்
எட்டுக்கும்இரண்டுக்குமிடையே
மூன்றில் நான்கில்
ஐந்தில்
ஆறில் ஏழில்
அவள்கழுத்தை
நெருங்குகிற
இருகரங்களில்
ஒன்றையாவது உடைக்க
ஆசைப்படுகிறாள்தினம்தினம்.

8:10

by Perundevi

Rising at dawn, Suchitra

scales every passing hour,

panting for breath.

8:10

If she waits at the

Happy Wedding Palace

bus-stop, she can reach

her office on time.

One night,

when her husband asked for another

helping of vegetable on his plate,

she abused him, mouthing

a couple of swear-words.

8:10

Daily,

she wants to break

at least one of the two

hands that loom close

between eight and two

in the sprawl of numbers –

at three, four,

five, six

and seven –

to wring her neck.

translated from Tamil by N. Kalyan Raman
more>>