காலம் இக்காலம்

by Perundevi

பெருங்காலத்தில் துளிக்காலங்கள்
ஒளிந்திருக்கின்றனஎப்போதும்.
என்றாலும்
புதையலைக் கண்ட

விபத்தைக் கேட்ட
முத்தத்தின் முதல்எச்சிலைச் சுவைத்த
கணத்துளிகளின் தொகுப்பாய்

அறியவேண்டாம்பெருங்காலத்தை.
அது
ஆயுளின் ஒரு கையால் ஆசிர்வதித்தபடி
வாழ்க்கையின் மறுகையால் தரதரவென
இழுத்துச் செல்கிறதுநம்மை.
நல்லெண்ணங்களின் திருவிழாக்களில்
நம்மைத்தொலைத்துபின்னர்
நோயாளியாக வேண்டப்படாதவராக
தேசங்களின் வர்க்கங்களின்பாலினங்களின்
அகதியாக மீட்டெடுக்கிறது.

களங்கமற்ற துளிக்காலங்கள்அயர்ந்துவிடுகின்றன அவ்வப்போது
மாளாவரம் வேண்டிய கில்காமேஷ்
அடக்கமுடியாததூக்கத்தில்
தன்வரத்தைத் தொலைத்ததைப் போல
இழக்கிறோம் நாம்அப்போதெல்லாம்.
பெருங்காலமோ கண்ணிமைப்பதே இல்லை
அது தூங்கிய கில்காமேஷின் காலடியில்
நாளுக்கொன்றாய் வைக்கப்பட்ட ரொட்டித்துண்டுகளாக
நம் அடி ஒவ்வொன்றையும்கணக்கிடுகிறது.

கொடுமையின் ஈகையின் துரோகத்தின் நேசத்தின்
ஏதோ ஒருகூரியமுனையால்
நமக்குள்ளே நம்மை வரையப்பார்க்கிறது
துளிக்காலம்.
பெருங்காலத்திடமோ
தோற்றுவிட்டோம்
பிறந்தபோதே.

Time This Time

by Perundevi

Though fleeting moments lie

hidden, always, within

eternity, let us not

know eternity as a collection

of moments when we

found the treasure,

heard of the accident or

first tasted the saliva of a kiss.

While blessing us with its one hand

of lifespan, with its other hand

life

drags us forward

roughly.

After losing us amid festive celebrations

of goodwill, it retrieves us later

as sick or unwanted persons,

as refugees in flight from

nations, classes and genders.

 

Innocent specks of time nod off to sleep every now and then; and

whenever that happens, just as Gilgamesh who sought

the boon of immortality lost it

in uncontrollable sleep, we lose all.

Eternity, though, never blinks.

It reckons our every step

as pieces of bread offered daily

at the feet of sleeping Gilgamesh.

 

With some sharp and deadly point

of cruelty, charity, betrayal or love,

this tiny speck of time tries

to draw us inside ourselves.

With eternity, though,

we lost the battle

right when we were born.

translated from Tamil by N. Kalyan Raman
more>>